டேராடூன்: உத்தரகண்ட் மாநில புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
உத்தரகண்ட் மாநில பாஜகவில் எழுந்த அதிருப்தியால் கட்சி தலைமையின் உத்தரவுப்படி முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந் நிலையில் புதிய முதல்வராக பாஜக எம்.பி. தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து டேராடூனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் ராணி மவுரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.