சென்னை
வரும் சட்டப்பேரவை தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது. அவ்வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் திமுக இடையே நடந்த இரண்டு கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.
இந்ந்நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தக்வல்கள் வெளியாகின. அதே வேளையில் இக்கட்சியுடன் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதை ஏற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இன்று திமுக உடன் பேஎச்சு வார்த்தை நடத்தியது.
இதில் இரு கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதையொட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக 3 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.