சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், பாஜகவில் இணைந்துள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள ஜெகத்ரட்சகன்,  வதந்தி தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி.யான ஜெகத்ரட்சகன், புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார். இன்று கூட்டணி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜெகத்ரட்சகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, ஜெகத்ரட்சன் விளக்கம் அளித்துள்ளார். அதில், நேற்று (8ந்தேதி) முதல் சில சமுக வலைதளங்களில்,  சில தவறான செய்திகள் என்னைப் பற்றி பரப்பப்படுகிறது.  இன்று காலை (9ந்தேதி) கழககத் தலைவரின் கட்டளையை சிரமேற்கொண்டு புதுவை மாநில  காங்கிரசுநடன் தொகதி பங்கீடுப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தேன்
 என்மீது சமூக வலைதளங்களில் வருகின்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம். இதுகுறித்து சைபர் கிரைமில்புகார் அளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.