பாக்தாத்: ஈராக்கில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது: அண்மைக்காலமாக நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மார்ச் 9 முதல் மார்ச் 22ம் தேதி வரை அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாள்களில் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொற்று பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஈராக்கில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,468 பேருக்குத் தொற்று பரவி உள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7,31,016 ஆக உயர, ஒரேநாளில் 24 பேர் பலியாகி உள்ளனர்.