சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சியான தேமுதிகவுக்கு, குறைந்த அளவிலான தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தலைமை கறாராக கூறி விட்டதால், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைமை ஆலோசனை நடத்தியது. அதைத்தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 41 இடங்கள் தேவை என்று பல மாதங்களாக கூறி வருகிறது. இல்லையேல், 3வது அணி அமைப்போம் என்று விஜயகாந்த்தின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் அதிமுக தலைமைக்கு மிரட்டல் விடுத்து வந்தார். ஆனால், அதை கண்டுகொள்ளாத அதிமுக தலைமை, முதலில் பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி, அக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. அதைத்தொடர்ந்து பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியது. பின்னர் தேமுதிகவுடன் பேசியது. ஆனால், தங்களுக்கு அதிமுக தலைமை முக்கியத்துவம் கொடுக்க மறுப்பதாக குறைகூறும் அதிமுக தலைமை, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் விடாப்பிடியாக இருந்து வருகிறது.
அதிகபட்சமாக அதிமுகவுக்கு 13 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியும் (பிரேமலதா சகோதரர் சுதீஷ்-க்காக) தருவதாக கூறி வருகிறது. ஆனால், அதை ஏற்க மறுத்து வரும் தேமுதிக, குறைந்த பட்சம் 25 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு தே.மு.தி.மு.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், இந்த நிலையில், தேமுதிக தலைமை, அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில், தேமுதீக மாவட்ட செயலாளர்களுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தே.மு.தி.க. தலைமை அவசர ஆலோசனை நடத்தியது. இதைத்தொடர்ந்து? அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 3-வது அணியான மக்கள்நல கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்று படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.