புதுடெல்லி:

ங்கதேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 26-ம் தேதி டாக்கா செல்கிறார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தான் கடந்த 1971-ம் ஆண்டு பிரிநந்து தனி வங்கதேசம் என்ற பெயரில் தனிநாடாக உருவானது. வங்கதேசம் உருவானதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. பாகிஸ்தானுடன் போரிட்டு தனிநாடு உருவாக இந்திய ராணுவம் முக்கிய பங்காற்றியது.

இதன் 50வது ஆண்டு விழா வங்கதேசத்தில் கொண்டாடப் படுகிறது. இதற்காக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பிரதமர் மோடி மார்ச் 26-ல் வங்க தேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 15 மாதங்களுக்குப் பின் பிரதமர் மோடி வெளிநாடு செல்வது இதுவே முதன் முறை ஆகும். கரோனா பரவலுக்கு பிறகு அவர் வெளிநாடு செல்லவில்லை.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா – மோடி பேச்சுக்குப் பின் இருவரும் டாக்கா – மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர்.