விகாஸ் பகல் இயக்கிய ‘குயின்’ படம் கங்கனா ரணாவத்தின் சினிமா வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய படம்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம்.

அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார், கங்கனா.

“10 ஆண்டுகள் கடுமையான போராட்டத்துக்கு பிறகு இந்தி சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளேன்.

குயின் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டபோது அந்த படம் ரிலீஸ் ஆகாது என்றே நினைத்தேன்.

அமெரிக்காவில் திரைப்பட பள்ளியில் நடிக்க எனக்கு பணம் தேவப்பட்டது. எனவே குயின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அந்த படத்தில் நடிக்க வாங்கிய சம்பளத்தில் தான், நியூயார்க்கில் திரைப்பட பள்ளியில் படித்தேன்.

அங்கு ஒரு சின்ன படமும் டைரக்டு செய்தேன். குயின் என் வாழ்க்கையை மாற்றும் என கனவிலும் நினைக்க வில்லை” என தெரிவித்துள்ளார், கங்கனா.

– பா. பாரதி

[youtube-feed feed=1]