சென்னை:
புதிய நீதி கட்சி, பெருத்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் உட்பட 13 சிறு கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் இன்னொரு அணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றன.
இத்தகைய சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பாஜக தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன்,தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், புதிய நீதி கட்சி, பெருத்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் உட்பட 13 சிறு கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன.