டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரையில் முதற்கட்டமாக 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது தடுப்பூசியின் 2ம் கட்ட பணி மார்ச் 1 முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.