சென்னை: தமிழ்நாட்டில், பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 9% அதிகரித்துள்ளது என்றும், அதன் மதிப்பு ரூ.7,008 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறியதாவது; தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாயில், மாதந்தோறும் வளர்ச்சி இருக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020ம் ஆண்டில் சில மாதங்களில் வருவாய் குறைந்தது.
இந்நிலையில், சில மாதங்களாக, ஜிஎஸ்டி வருவாய் வசூல் அதிகரித்து வருகிறது. இதேபோல, பிப்ரவரியிலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வருவாய், ரூ.7,008 கோடி வசூலாகி உள்ளது. இது, 2020 பிப்ரவரியில் ரூ.6,426 கோடியாக இருந்தது. இது 9% வளர்ச்சியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஜிஎஸ்டி என்னதான் வசூலானாலும், மாநில அரசுகளுக்கு உரிய பங்கை மத்திய அரசு தராமல், அவர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளை நாம் மறுக்க முடியாது.