புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு ஆலோசகர்களாக தமிழக அதிகாரிகள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புதுவை அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தல் நடந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையில், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) தமிழிசை செளந்திரராஜன் கட்டுப்பாட்டில் புதுச்சேரி அரசு நிர்வாகம் இருக்கும்.
இந் நிலையில், தமிழிசை சௌந்தர ராஜனுக்கு நிர்வாகத்தில் உதவி செய்வதற்காக தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரமெளலி மற்றும் சி.ஆர்.பி.எப்.பின் டைரக்ட் ஜெனரலாக இருக்கும் மகேஷ்வரி ஐ.பி.எஸ். ஆகிய இருவரையும் தமிழிசையின் ஆலோசகராக மத்திய அரசு நியமித்திருக்கிறது.
Patrikai.com official YouTube Channel