டில்லி

முதியோருக்கான தபால் வாக்களிப்பு உள்ளிட்ட பல அம்சங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க,ம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் முதியோர்களுக்குத் தபால் வாக்கு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.   இது குறித்த விளக்கங்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.  அவற்றை நாம் இங்குப் பார்ப்போம்.

  • தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.
  • வாக்களிப்பு நேரம் குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்யலாம்
  • அரசியல் கட்சியினர் 5 பேர் வரை மட்டுமே வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்
  • வீடு வீடாகப் பரப்புரை செய்யும் வேட்பாளர் தன்னுடன் 4 பேரை அழைத்துச் செல்லலாம்.
  • வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
  • தேர்தலை சுமுகமாக நடத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு பெருமளவில் உள்ளது
  • இம்முறை 80 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தபால் வாக்களிக்கும் முறை அமலுக்கு வருகிறது.
  • அதே வேளையில் இது கட்டாயம் இல்லை.  80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் நேரில் வந்தும் வாக்களிக்கலாம்.