டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,29,326 ஆக உயர்ந்து 1,56,598 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 13,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,10,29,326 ஆகி உள்ளது. நேற்று 100 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,56,598 ஆகி உள்ளது. நேற்று 13,459 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,24,146 ஆகி உள்ளது. தற்போது 1,44,027 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 6,218 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,12,312 ஆகி உள்ளது நேற்று 51 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,857 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,869 பேர் குணமடைந்து மொத்தம் 20,05,851 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 53,409 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 4,034 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,40,849 ஆகி உள்ளது. இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,120 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,823 பேர் குணமடைந்து மொத்தம் 9,81,835 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 54,665 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 383 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,48,849 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,303 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 378 பேர் குணமடைந்து மொத்தம் 9,30,465 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,062 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 70 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,409 ஆகி உள்ளது. நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,168 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 84 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,666 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 575 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 442 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,49,166 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,472 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 453 பேர் குணமடைந்து மொத்தம் 8,32,620 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.