தமிழ்நாட்டில் என்னென்ன சங்கங்கள் உள்ளன, என்பது அவர்கள் போராட்டம் நடத்தும் போதோ அல்லது ஊடகங்களை சந்திக்கும் போதோ தான் தெரிய வரும்.
தமிழ்நாட்டில் கணவனை இழந்த விதவைகளுக்கும் ஒரு சங்கம் இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.
அதன் பெயர்- ‘விதவைகள் வாழ்வுரிமை கூட்டமைப்பு’. இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர், கஸ்தூரி. அவர் விடுத்துள்ள சில கோரிக்கைகள் :
*தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடுவது வழக்கம். இந்த முறை அந்த கட்சிகள் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விதவைகள் நல வாரியம் அமைப்போம்” என வாக்குறுதியில் கூற வேண்டும்.
* தமிழ்நாட்டில் 40 லட்சம் விதவைகள் உள்ளோம். அவர்கள் வாழ்க்கை தரம் எப்படி உள்ளது என ஒரு ‘டேட்டா’ தயாரித்து, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும்.
* “விதவைகளுக்கு இப்போது 1000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது. அதனை 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்” என விதவைகள் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தியுள்ளார்.
– பா. பாரதி