டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10 லட்சத்துக்கு 5ஆயிரத்து 71 ஆக உயர்நதுள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்துக்கு 56 ஆயிரத்து148 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தொற்று பரவல் ஒரளவு கட்டுக்குள் இருந்தாலும், மகாராஷ்டிரா, கேரளா உள்பட சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், அங்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும், கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் (21ந்தேதி) மட்டும் 13,979 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 1,10,05,071 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, நேற்று 79 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை 1லட்சத்து 56ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 1லட்சத்து 47ஆயிரத்து 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 9476 பேர் தொற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,06,97,014 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும், 2வது இடத்தில் கேரளாவும் தொடர்ந்து. தமிழகம் 5வது இடத்தில் உள்ளது.