டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,91,092 ஆக உயர்ந்து 1,56,339 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 14,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,09,91,092 ஆகி உள்ளது.  நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,56,339 ஆகி உள்ளது.  நேற்று 11,412 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,87,538 ஆகி உள்ளது.  தற்போது 1,42,691 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,281 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,93,913 ஆகி உள்ளது  நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,753 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,567 பேர் குணமடைந்து மொத்தம் 19,92,530 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 48,439 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,650 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,30,588 ஆகி உள்ளது.  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,075 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,841 பேர் குணமடைந்து மொத்தம் 9,67,630 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 58,609 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 490 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,47,736 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,292 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 389 பேர் குணமடைந்து மொத்தம் 9,29,447 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 54 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,210 ஆகி உள்ளது.  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 70 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,439 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 604 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 438 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,47,823 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,457 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 459 பேர் குணமடைந்து மொத்தம் 8,31,246 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.