சென்னை: ரஜினி – கமல் சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை என எம்என்எம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். . இந்தச் சந்திப்பு 30 நிமிடங்களுக்கும் மேல் நடைபெற்றது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரஜினி கமல் சந்திப்பு நட்பு ரீதியானது என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி – கமல் சந்திப்பு அதிகாரப்பூர்வமான அரசியல் சந்திப்பு இல்லை. தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. மக்கள் நீதிமய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.
அரசியலை விட்டு விலகிய ரஜினி, தொடர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கமல் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பரபரப்பை ஏற்படுத்தியது. . ஏற்கனவே கமல்ஹாசன், தேர்தல் நேரத்தில் நண்பர் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.