டெல்லி: சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகையின் 17வது தவணையாக ரூ.5,000 கோடியை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் இப்போது விடுவித்துள்ள ரூ.5,000 கோடியில் ரூ.4,730.41 கோடியை 23 மாநிலங்களுக்கும், ரூ.269.59 கோடி யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது.
அதன் காரணமாக ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்பு சாளரத்தின் கீழ் கடனாகப் பெற்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இதுவரை சுமார் ரூ.1 லட்சம் கோடி அதாவது, 91 சதவீத தொகை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு விடுவித்து உள்ளது. அதில் ரூ.91,460.34 கோடி மாநிலங்களுக்கும், ரூ.8,539.66 கோடி சட்டப் பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.