மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் ஏராளமான நூலகங்கள் அமைக்கப்பட்ட நிலையில், அவைகளுக்கு போதிய நூலகர்கள் பணியமர்த்தபடாததால், கிராமப்பகுதிகளில் உள்ள பல நூலகங்கள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றன. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் மூடப்பட்ட பல நூலகங்கள் இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளது.
இதுதொடர்பாக மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா பொதுநல வழக்கு தொடர்ந்திருந்ததார்.
இதுதொடர்பாக மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா பொதுநல வழக்கு தொடர்ந்திருந்ததார்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து. தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை இயங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நகர்ப்புற நூலகங்கள் திறக்கப்பட்ட நிலையில், கிராமப்புற நூலகங்களே மிக முக்கியமானவை என்பதால், அவைகளை விரைவாக திறக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வண்டியூரில் புதிதாக திறக்கப்பட்ட நூலகத்தை திறப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.