இந்தி நடிகை கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை தெரிவித்து, வீண் வம்பை விலைக்கு வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனால் அவர் மீது மும்பையில் பல வழக்குகள் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் உள்ளன.
அதில் ஒரு வழக்கு – தேசத்துரோக வழக்கு.
முன்னாவர் அலி சையது என்பவர் “கங்கனா, இரு சமூகத்தினர் இடையே வெறுப்பை தூண்டும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தார்.
இதனால் கங்கனா மீது மும்பை காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கங்கனா பாம்பே உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
“ட்விட்டரில் கருத்து சொல்வது வன்முறையாகாது. எனது கருத்தால் எந்த வன்முறையும் நிகழவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை வரும் 26 ஆம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
– பா. பாரதி