டெல்லி: கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தமது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: சிலிண்டர் விலை உயர்வு குறித்த செய்திகளை டேக் செய்து, இரண்டு பேரின் வளர்ச்சிக்காக பொதுமக்களிடமிருந்து பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்கள், பொருளாதார வீழ்ச்சி குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி இப்போது கேஸ் விலை உயர்வுக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தற்போது உயர்த்தப்பட்ட கேஸ் விலையின் படி டெல்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .50 அதிகரித்து 14.2 கிலோகிராம் சிலிண்டர் ரூ .769 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735லிருந்து ரூ.785 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த 4ம் தேதி சிலிண்டர் விலை ரூ.25 உயா்த்தப்பட்ட நிலையில், விலை உயர்வு இம்மாதத்தில் இது இரண்டாவது முறை ஆகும்.