
லாகூர்: பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 165 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், டேவிட் மில்லர் 45 பந்துகளில் 7 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 85 ரன்களைக் குவித்தார். மாலன் 27 ரன்களை எடுத்தார்.
முடிவில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்தது தென்னாப்பிரிக்கா.
தற்போது இலக்கை நோக்கி ஆடிவரும் பாகிஸ்தான், 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
[youtube-feed feed=1]