சென்னை: இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், அதிக விக்கெட் எடுத்த பெளலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இன்றைய டெஸ்ட் போட்டியில், மொத்தம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின். இதனையடுத்து, இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், மொத்தமாக 266 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஹர்பஜனின் 265 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்துள்ளார் அஸ்வின்.
ஹர்பஜனின் ஆவரேஜ் 28.76 மற்றும் அஸ்வினின் ஆவரேஜ் 22.67. அதேசமயம், இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முன்னாள் வீரர் அனில் கும்ளே. இந்திய மண்ணில் மொத்தம் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அவர், 24.88 ஆவரேஜ் வைத்துள்ளார்.
ஒட்டுமொத்த அளவில் பார்க்கையில், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை அனில் கும்ளேதான் கைப்பற்றியுள்ளார். அவர் 619 விக்கெட்டுகளும், கபில்தேவ் 434 விக்கெட்டுகளும், ஹர்பஜன் 417 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். அஸ்வின் 396 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார்.