சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிலவரப்படி, இந்திய அணி, இங்கிலாந்தைவிட மொத்தமாக 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கே ஆட்டமிழந்தது இங்கிலாந்து. இதனால், இந்திய அணி 195 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதனிடையே, தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது இந்தியா. ரோகித்தும் கில்லும் களமிறங்கினர். ஆனால், ஷப்மன் கில் 14 ரன்களில் அவுட்டானார்.
ஆனால், ரோகித் ஷர்மா 62 பந்துகளில் 25 ரன்களை எடுத்து நிதானமாக ஆடி வருகிறார். அவருடன் புஜாரா இணைந்து ஆடிவருகிறார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது. நாளை, இந்திய அணி நீண்டநேரம் நிலைத்து ஆடும் பட்சத்தில், இங்கிலாந்திற்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து திணறடிக்கலாம்!