சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் சேர்த்தது.

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், பின்வரிசையில் வேறு எந்த பேட்ஸ்மேனும் ஒத்துழைப்பு தராத நிலையிலும், அசராமல் ஆடி 58 ரன்களைக் குவித்து நாட்அவுட்டாக நின்றார். மொத்தம் 77 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 3 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களைக் குவித்தார். இதனால், இந்திய அணி 329 என்ற நல்ல ஸ்கோரை, பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத மைதானத்தில் எடுத்தது.

அஸ்வின் நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அக்சார் படேல் 5 ரன்களுக்கும், முகமது சிராஜ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

மொத்தம் 95.5 ஓவர்கள் ஆடிய இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பன்ட்டிற்கு ஒத்துழைப்பு கிடைத்திருந்தால், இந்திய அணியின் எண்ணிக்கை 350ஐ தாண்டியிருக்கலாம்.