டெல்லி: தமிழகத்தை கடந்த ஆண்டு சூறையாடிய புரெவி மற்றும் நிவர் புயல் பாதிப்புக்காக மத்தியஅரசு தரப்பில் இருந்து ரூ.ரூ.286 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 25ந்தேதி அன்று நிவர் புயல் வீசியது.இதில் கடலூர் உள்பட பல மாவட்டங்கள் கமையான பாதிப்புகளை எதிர்கொண்டன. பின்னர் , தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி புரெவி புயல் வீசியது. இந்த இரு புயல்களால் தமிழகத்தில் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றும் வீசியது. இதனால், கட லூர், நாகை, திருவாரூர், விழுப் புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் வேளாண் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த புயல் பாதிப்புகளை சீரமைக்கவும் மீட்பு, நிவாரணத்துக்காகவும் மத்திரயஅரசு நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து, மத்தியஅரசின் அதிகாரிகள் இருமுறை தமிழகம் வருகை தந்து, சேதங்களை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது, தமிழகத்திற்கு நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் ரூ.286 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதியில், நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ 63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புகளுக்கு ரூ 223.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.