டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேசம், 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன்மூலம், விண்டீஸ் அணியைவிட 204 ரன்கள் பின்தங்கியுள்ளது.

விண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸிலூ 409 ரன்களை அடித்தது. ஆனால் தற்போது, தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேச அணி தடுமாறி வருகிறது.

அந்த அணியின் துவக்க வீரர் தமீம் இக்பால் 44 ரன்கள் அடிக்க, முஷ்பிகுர் ரஹீம் 54 ரன்களை சேர்த்தார். கேப்டன் மோமினுல் ஹேக் 21 ரன்கள் மட்டுமே அடித்தார்.

தற்போது லிட்டன் தாஸ் 35 ரன்களுடனும், மெஹ்தி ஹாசன் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

விண்டீஸ் தரப்பில், கார்ன்வாலுக்கு 3 விக்கெட்டுகளும், கேப்ரியலுக்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்துள்ளன.