டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,08,92,550 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,55,588 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும் தினரிச பாதிப்பு 10ஆயிரம் அளவில் தொடர்ந்து வருகிறது. தற்போது, நாடு முழுவதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும 12ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,08,92,550 ஆக உயர்நதுள்ளது.
நேற்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,55,588 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11,358 பேர் குணமடைந்துள்ளார். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 98 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர, தமிழ்நாடு மாநிலங்கள் உள்ளன.