வாஷிங்டன்:

டந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை மக்களுக்கு தெரிந்ததை விட மிகவும் மோசமடைந்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்களுக்கு வெளியில் சொல்லப்பட்டதை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு மிகவும் குறைந்தது மட்டுமல்லாமல், கொரோனா வைரசால் வந்த நிமோனியா காரணத்தால் நுரையீரலிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் இருந்து வால்டர் ரீட் தேசிய மிலிட்டரி மையத்திற்கு எடுத்துச் செல்லும்போது அவர் நிலைமை மிகவும் மோசமடைந்தது, அவருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சுவாசிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு அதிக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, 74 வயதில் அவர் அதிக எடை கொண்டிருப்பதாகவும், இதனால் அவருடைய நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை பற்றி நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.