கொல்கத்தா: கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் பணி நிறைவடைந்தவுடன், சர்ச்சைக்குரிய சிஏஏ அமலுக்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மேற்குவங்க மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் அவர் இதை தெரிவித்தார்.

வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் குடிபெயர்ந்து வாழும் மத்துவா சமூகத்திற்கு, இச்சட்டம் பெரிய பயனளிக்கும் என்று குறிப்பிட்டார் அவர். இவர்களைத்தவிர, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து கடந்த 2015ம் ஆண்டிற்கு முன்னதாக இந்தியாவில் குடியேறிய முஸ்லீமல்லாத சமூகங்களுக்கு இந்த சட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

மேலும், “இந்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. ஆனால், அப்படி பாதிப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரம் ச‍ெய்கின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.