சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், துறைமுகங்கள் செல்லும் கனரக வாகனங்கள் இலகுவாக துறைமுகங்களை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்ட வெளிவட்டச்சாலையின் இரண்டாம் பகுதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்கக்கூடிய சென்னை நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. இதன் பணிகள் 2016ம் ஆண்டே முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்பட பல்வேறு குளறுபடிகளால், பணி நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் கடந்த 2020ம் ஆண்டு பணிகள் முடிவடைந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிவட்டச் சாலை திறக்கும் நிகழ்வும் காலதாமதமானது.
இந்த நிலையில், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிவட்டச்சாலையின் 2வது பகுதியை திறந்து வைத்துள்ளார். இந்த சாலைப்பணியானது, சுமார் 1,075 கோடி ரூபாய் மதிப்பிட்டில் உருவாக்கப்பட்டுள்ள 30 முதல் 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு சர்வீஸ் சாலையுடன் 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி வரும் கனரக வாகனங்கள், சென்னை நகருக்குள் வராமல் துறைமுகங்களை அடையலாம்.
ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் என்ஹெச் 205 இல் நெமிலிச்சேரியையும், மிஞ்சூரையும் இணைக்கும் சென்னை வெளி வளைய சாலையின் (சிஓஆர்ஆர்) இரண்டாம் சாலையாயின்மூலம், , திருவள்ளூர் மற்றும் ஆந்திராவை நோக்கி பயணிக்கும் வாகன ஓட்டிகள் இந்த சாலையைப் பயன்படுத்தி சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையை அடையலாம், பெங்களூரு நோக்கிச் செல்வோர் நாசரத்பேட்டையில் இருந்து வெளியேறி அவ்வாறு செய்யலாம்.
2,100 பேருந்துகள், 5,300 மல்டி-ஆக்சில் வாகனங்கள் மற்றும் 2,400 இலகுரக வர்த்தக வாகனங்கள் உட்பட கிட்டத்தட்ட 30,000 வாகனங்கள், திட்டத்தின் முதல் கட்டத்தை கடந்து செல்கின்றன, இது வண்டலூரிலிருந்து ஜி.எஸ்.டி. நெமிலிச்சேரிக்கு சாலை (என்.எச் 45) மற்றும் ஆகஸ்ட் 2014 இல் திறக்கப்பட்டது.
இந்த பாதை அமைக்கும் பணி மார்ச் 2014 ல் பணிகள் தொடங்கியது. 2016ல் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் 50 பஸ் விரிகுடாக்கள் மற்றும் இரண்டு டிரக் லே-பைக்கள் உள்ளன, அங்கு லாரிகள் ஓய்வு எடுக்கலாம். இரண்டு வழிவகை வசதிகளுக்காக இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெளிவட்டச் சாலை திறப்பு விழாவில், ஊரக கைத்தொழில் அமைச்சர் பி.பெஞ்சமின் மற்றும் தமிழ் கலாச்சார அமைச்சர் கே.பண்டியராஜன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் ஏ.கார்த்திக் மற்றும் டி.என்.ஆர்.டி.சி தலைமை பொது மேலாளர் ஒய்.ஆர். பாலாஜி கலந்து கொண்டார்.
இந்த சாலை மூலம், ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வரும் சரக்கு ஊர்திகளும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களும் சென்னை மாநகருக்குள் நுழையாமலேயே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியும். இதன் மூலம் சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் பதிவிட்டுள்ள டிவிட்டில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான சாலையினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.