சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குஏற்கனவே 59 ஆக உயர்த்திய தமிழகஅரசு தற்போது 60 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், அரசு பணியாற்றுபவர்களின் ஓய்வுபெறும்த வயதை தமிழகஅரசு கடந்த ஆண்டு 59 ஆக உயர்த்தியது. இந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டு நீடித்து 60ஆக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் நிதி பற்றாக்குறை காரணமாக, ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படுவதை தவிர்க்கும் நோக்கிலும், தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவை பெறும் நோக்கிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயதை 59ல் இருந்து 60 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்று சட்டசபையில் முதல்வர் வெளியிட வாயப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பண பலன்கள் வழங்க இந்த ஆண்டுக்கு தேவையான 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.