மும்பை: மகாராஷ்டிரா மாநில பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில், மாநகராட்சி இணை ஆணையர், தண்ணீர் என கருதி, சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நிதித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, அப்போது மும்பை இணை ஆணையர் ரமேஷ் பவார் என்பவரும் கலந்துகொண்டார்.
அவருக்கு உதவியாளர், கையை சுத்தப்படுத்த சானிடைசர் பாட்டிலை கொடுத்தார். ஆனால், அதை கவனிக்காத ரமேஷ் பவார், தண்ணீர் என நினைத்து சானிடைசர் பாட்டிலை எடுத்துகுடிக்கத் தொடங்கினர். . இதனை கண்ட மற்ற அதிகாரிகள் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தினர்.
இதனால் ரமேஷ் பவாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயர் பதவியில் உள்ள இணை அதிகாரி ஒருவரே, சானிடைசருக்கும், தண்ணீருக்கும் வித்தியாசம் தெரியாமல் கவனக்குறைவாக நடந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முகாமில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகளைப்போல அதிகாரிகளும் மந்தைகளாக மாறிவிட்டார்கள் போலும்…