சென்னை: திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் ஊடக பிரதிநிதியாகவும் இருந்தவர் ராஜீவ் காந்தி. சீமானுடனும், கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாகவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து விலகினார்.
அவர் அண்மையில் திமுகவில் இணைந்தார். தற்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ராஜீவ் காந்தியை திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக நியமித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel