டில்லி

நோய் பரவலைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பு குறித்து இங்கு காண்போம்.

எந்த ஒரு நோய் பரவல் ஏற்பட்டாலும் அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டறியப்படும் பணிகள் தொடங்கப்படுகின்றன.  இதற்கான பணிகள் மற்றும் தயாரிப்பு குறித்து இங்கு காண்போம்.

தடுப்பு மருந்துகளில் உள்ளவை என்னென்ன?

தடுப்பு மருந்துகளில் நோயை உருவாக்கும் வைரஸ்களின் சிறிய துண்டுகள் அல்லது அந்த துண்டுகளை உருவாக்கும் உட்பொருட்கள் உள்ளன. இதைத் தவிர தடுப்பூசி கெட்டுப் போகாமல் வைக்கும் பொருட்களும் உள்ளன. இத்தகைய பொருட்கள் பல ஆண்டுகளாகக் கோடிக் கணக்கான தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு தடுப்பூசியும் குறிப்பிட்ட பயனபட்டுகக உருவாக்கபட்வதால் அனைத்து பொருட்களும் சோதித்த பிறகே பயனபடுத்தபடுகின்றன.

ஆண்டிஜென்கள்

ஆண்டிஜென் என்பது வைரஸுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் பொருள் ஆகும்.  அல்லது இந்த வைரஸை போல மற்றொன்றை உருவாக்கி அதன் மூலம் வைரஸுடன் போராடச் செய்யும் பொருள் எனவும் பொருள் கொள்ளலாம்.  இந்த ஆண்டிஜென்கள் நோயை உருவாக்குவதில் ஒரு சிறு பங்கு வகித்திருந்தாலும் அந்த வைரஸை வலுவிழக்க செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

பாதுகாப்பு பொருட்கள்

ஒரு தடுப்பூசி குப்பி திறக்கப்பட்டதும் அது தீரும் வரை கெடாமல் இருக்கப் பாதுகாப்பு பொருட்கள் சேரக்கபடுகின்றன.  ஒரு டோஸ் மட்டுமே உள்ள குப்பிகளில் அடைக்கப்படும் தடுப்பு மருந்துகளுக்கு இது தேவைப்படாது.  இதற்காக அதிக அளவில் பினாக்சிஎதனால் பல தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படுகிறது.,   இந்த பாதுகாப்பு  பொருட்கள் குழந்தைகள் பராமரிப்பில் இருந்து தடுப்பு ஊசி வரை பயன்படுத்தப்படுகிறது.

ஸ்டெபிலைசர்கள்

ஸ்டெபிலைசர் என அழைக்கபடும் நிலை  படுத்திகள் தடுப்பூசிகளில் உள்ள ரசாயனங்கள் ஒன்றுக்கொன்று ஏதும் மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன.  இவை பொதுவாக, சர்க்கரை, கிளிசரின், கெலடின், புரதங்கள் போன்றவையாக இருக்கும்.

ஒட்டும் பொருட்கள்

தடுப்பூசிகளில் உள்ள பொருட்கள் ஒன்றோடொன்று சேர ஒட்டும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த பொருட்கள் திரவப் பொருட்கள் மற்றும் திடப்பொருட்கள் ஒன்றோடொன்று இணைய மிகவும் தேவைப்படுகின்றன.  இதை நாம் ஐஸ்கிரீமுடன் ஒப்பிடலாம்.

எச்சங்கள்

எச்சங்கள் பல பொருட்களின் சிறு சிறு துகள்கள் ஆகும்.  இவை தடுப்பூசி தயாரிக்கும் போது உருவாகின்றன.  இந்த பொருட்கள் பொதுவாக முட்டை புரதங்கள், ஈஸ்ட் அல்லது ஆண்டி பாடிகளாக இருக்கும்.க்   இந்த எச்சங்கள் சிறிய அளவில் தடுப்பூசிகளில் மீதம் இருக்கும்.  ஆகையால் அவற்றை பத்து லட்சங்களில் ஒன்று அல்லது 10 கோடிகளில் ஒன்று எனக் கணக்கிடப்படுகின்றன.

நீர்க்க வைக்கும் பொருட்கள்

நீர்க்க வைக்கும் பொருட்கள் என்பது கெட்டியாக உள்ள மருந்துகளை ஊசி மூலம் செலுத்த வகையான அளவுக்கு நீர்க்க செய்வதாகும்.  இதற்கு  பொதுவாக டிஸ்டில்ட் வாட்டர் பயன்படுத்தப் படுகிறது.

துணைப் பொருட்கள்

ஒரு சில தடுப்பூசிகளில் துணைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த துணைப் பொருட்கள் தடுப்பூசிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றன.  அத்துடன் இவை தடுப்பூசிகளை செலுத்தும் இடங்களில் வெளியில் வைக்கும் போது கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றன.  இவை பொதுவாக அலுமினிய  அடிப்படை உப்புகளாக இருக்கும்.  இவை உடலுக்குத் தீங்கு விளைவிக்காது எனினும் அதிகளவில் சேர்க்கப்படுவதில்லை.

அடுத்த பகுதியில் தடுப்பூசி தயாரிப்பு குறித்து மேலும் பார்ப்போம்