மும்பை
மகாராஷ்டிர மாநில அரசு விரைவில் வாக்குச் சீட்டு முறையையும் மின்னணு வாக்கு இயந்திரத்துடன் சேர்க்க விரைவில் சட்டம் இயற்ற உள்ளது.
நாடெங்கும் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்கு இயந்திரம் பயன்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளாததால் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குச் சீட்டும் வாக்காளர்கள் விரும்பினால் பயன்படுத்தலாம் என ஒரு சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் இம்முறை அமலுக்கு வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.
மாநில சட்டப்பேரவை இத்தகைய சட்டங்களை இயற்ற இந்திய அரசியலமைப்பு சட்டப்படி விதி எண் 328 இன் கீழ் அதிகாரம் உள்ளது. இதையொட்டி மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் நானா படோல் இன்று ஒரு கூட்டம் நடத்தி உள்ளார். இதில் மாநில தேர்தல் ஆணையர், சட்டம் நீதி செயலர், சட்டப்பேரவை அமைச்சர் அமித் தேஷ்முக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.