சென்னை: முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று மத்திய பட்ஜெட் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.

மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel