சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார்.
அதிமுக, அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதில் அளித்து உள்ளார். அந்த பதிலில் அவர் கூறி இருப்பதாவது: டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதுபற்றி தலைமை பரிசீலனை செய்து முடிவு எடுக்கும்.
அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்புக் கடிதம் தர வேண்டும்.அதிமுக பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர்.
அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. பல கட்டங்களாக அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சித்தார். இப்போது தம்மை காப்பாற்றிக் கொள்ள தம் பக்கம் இருப்பவர்களை அவர் ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.