திருப்பூர்:
திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதி பாஜக வை சேர்ந்த பிரமுகர் ராஜ் என்பவர் பனியன் நிறுவனத்தில் தையல் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பகுதியில் உள்ள 12ம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவியை விடுமுறையில் பணிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி உள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Patrikai.com official YouTube Channel