புதுடெல்லி: இந்தாண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணாக்கர்கள் யாரும் தேர்வில் தோல்வியடைய மாட்டார்கள் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய விதியின்படி, அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியில் போன்ற பாடங்களில் தோல்வியடைவோர், அதே வகுப்பில் இன்னொரு ஆண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, தோல்வியடைந்த பாடங்களுக்குப் பதிலாக ‘திறன் பாடம்’ வைக்கப்படும்.

இறுதியாக, மொத்தம் 5 பாடங்களில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் சதவிகிதம் கணக்கிடப்படும். சிபிஎஸ்இ அமைப்பின் இந்தப் புதிய விதிமுறை, மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

மத்திய அரசின் ‘திறன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கமளிக்கவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில், நல்ல மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் திறன் இல்லாமலே கூட இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.