கொல்கத்தா:
மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவாசாயிகள், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்தி செங்கோட்டையை அடைந்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகளும் ஆதரவு தெரிவித்து, மாநில சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. இந்நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.