டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறையை தொடங்கியவர்களிடம், அரசு அடையாள அட்டை இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகள், நேற்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தினர். பேரணியில் வன்முறை வெடிக்க, போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.
இந் நிலையில் வன்முறையை தொடங்கியவர்களிடம், அரசு அடையாள அட்டை இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: காசிப்பூர் எல்லையில், ட்ராக்டர் பேரணிக்கு திட்டமிடப்பட்ட பாதையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தினர். காவல்துறையினர் தடை விதித்தனர். மேலும் கண்ணீர் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தினர். இது வன்முறையைத் தூண்டியது.
வன்முறையை தொடங்கிய 15 பேரை விவசாயிகள் நேற்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் அரசு அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்குப் புரியும். இது ஒரு அமைதியான இயக்கத்தைக் கெடுப்பதற்கான ஒருங்கிணைந்த சதித்திட்டம் என்று கூறியுள்ளார்.