காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ரயில் நிலைய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை என்று  அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பல மாதங்களுக்கு முன்பே காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் 100 அடி உயரம் கொண்ட தேசியக்கொடி கம்பம் அமைக்கப்பட்டது.

இந்த கம்பத்தை அமைத்த ஒப்பந்ததாரர் ரயில்வே துறையின் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக நூறடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாகவும், இதையடுத்து ஒப்பந்ததாரர் மீது காஞ்சிபுரம் அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ரயில்வே நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்ததாரர் உடனடியாக தாமாக முன்வந்து தான் ஏற்றிய தேசியக்கொடியை இறக்கி விட்டார்.

குடியரசுதின நாளான இன்று கூட 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றாமல் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டி உள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், நாளை ரயில்வே துறையை சார்ந்த உயரதிகாரிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை தர இருக்கிறார்கள் அப்போது 100 அடி உயரம் கொண்ட புதிதாக அமைக்கப்பட்ட இந்த கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.