ஜேம்ஸ்பாண்ட்’ படத்துக்கு வழி விட்ட ராஜமவுலி…

’பாகுபலி’ படத்தின் இரு பாகங்களும், இந்தியாவில் மட்டுமில்லாது, ஜப்பான்,சீனா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வசூல் பார்த்தது.

இதனால் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படமான ‘’ஆர்.ஆர்.ஆர்.படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மற்ற படங்களை போல் ராஜமவுலி படத்தையும். கொரோனா தள்ளாட வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என முதலில் நாள் குறிக்கப்பட்டு  பின்னர் ஜனவரி 8 ஆம் தேதி என மீண்டும் மாற்றப்பட்டது.

ஹீரோக்கள் ஜுனியர் என்.டி.ஆர்.- ராம்சரண் பங்கேற்கும் ’கிளைமாக்ஸ்’. காட்சி ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வரும் நிலையில்,இந்த படத்தை  அக்டோபர் 8 ஆம் தேதி ரிலீஸ் செய்ய நாள் குறிக்கப்பட்டது.

ஆனால் அதிகாரப்பூர்வாக படக்குழு அறிவிக்க வில்லை.

படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கும் ஐரிஷ் நடிகை அலிசன் டோடி’’ ஆர்.ஆர்.ஆர். அக்டோபர் 8 ஆம் தேதி ரிலீஸ்’’ என தனது வலைத்தளத்தில் பதிவிட, படக்குழு திகைத்துப் போனது.

8 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து நாள் கழித்து அக்டோபர் 13 ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளனர்.

ஏன் நான்கு நாள் கால தாமதம்?

8 ஆம் தேதி ஜேம்ஸ்பாண்ட் படமான் ‘’ நோ டைம் டு டை’’ உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது.

சில வெளிநாடுகளில் ஆர்.ஆர்.ஆர்.படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதால், ஜேம்ஸ்பாண்ட் வசூல் குவித்த ஐந்து நாள் கழித்து, நம்ம ஊர் படத்தை வெளியிட முடிவு செய்தனர்.

-பா.பாரதி.