சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20 மற்றும் 21 ஆம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.   அத்துடன் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற வேண்டி உள்ளன.  இது குறித்து இந்த தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்பது குறித்து டில்லியில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தி உள்ளார்.

தேர்தல் நேரத்தில் மத்திய பாதுகாப்புப் படையினரின் தேவை குறித்து தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனையின் போது மத்திய அரசுடன் ஆலோசித்துள்ளது.  இம்முறை தேர்தல் தள்ளிப் போகலாம் என தகவல் வெளியானது.  மேலும் பொதுத் தேர்வுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல்களை நடத்த வெண்டி உள்ளது.  அது மட்டுமின்றி கொரோனா அச்சுறுத்தலால் பல நடவடிக்கைகளை ஆணையம் எடுக்க வேண்டி உள்ளது.

தேர்தல் ஆணையம் அதிக அளவில் வாக்குச் சாவடிகளை அமைக்கவும் அதற்கான இடங்களைத் தேர்வு செய்தல், மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு ஆகிய பணிகளை மும்முரமாக செய்து வருகிறது.  இந்த பணிகள் முடிவடைந்த பிறகு வரும் பிப்ரவரி மாதம் 20 மற்றும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் ஆணைய கூட்டத்தில் தமிழக தேர்தல் நடைபெற உள்ள தேதிகள் முடிவு செய்யப்பட உள்ளன.