கொல்கத்தா: நாட்டில் சுழற்சி முறையில் 4 தலைநகரங்களை அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணியை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசியதாவது: நாட்டின் விடுதலை போரில் மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பங்குபெற்றுள்ளன. அப்படி இருக்கையில் நாட்டிற்கு ஒரு தலைநகர் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?
சுழற்சி முறையில் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தலைநகர் அமைக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக திரிணமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசை வலியுறுத்துவார்கள்.
திரிணமூல் அரசு நேதாஜி பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருவகிறது. தேர்தலை மனதில் வைத்து மட்டும் கொண்டாடுவதில்லை என்று பேசினார்.