அசாம் மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி பதவியில் உள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட ஆறு கட்சிகள் பலமான கூட்டணியை உருவாக்கியுள்ளன.

ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பத்ருதீன் அஜ்மல் நேற்று துப்ரியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் “அசாம் மாநிலத்தில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் தாடி வளர்க்க முடியாது. தொப்பி போட முடியாது. மசூதிகளில் தொழுகை நடத்தவும் அனுமதி கிடைக்காது” என்று தெரிவித்தார்.

“இந்த மூன்றும் இல்லாமல் முஸ்லிம்கள் இருக்க முடியுமா?” என கூட்டத்தினரிடம் கேள்வி எழுப்பிய அஜ்மல் “பா.ஜ.க.வை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

– பா. பாரதி