மங்கோலியாவில் குழந்தை பிறந்த பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டது தொடர்பான வெளியான வீடியோவால், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கோரிய பிரதமர் உக்னாஜின் குரேல்சுக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் மங்கோலியான நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண், அவரது குழந்தை யுடன் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி, கொரோனா வார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவருக்கு கொரோனா பாதுகாப்பு உடைகள் கொடுக்காமல் சாதாரண பைஜாமா உடையில் ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு -25 டிகிரி காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
பெண்களை அதிகம் மதிக்கும் மங்கோலியாவில் ஒரு பெண் மருத்துவர்களால் அஜாக்கிரதையாக கையாளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ந்தெழுந்தனர். மங்கோலிய தலைநகர் உலான்பாடரில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் உக்னாஜின் குரேல்சுக், தனது அஜாக்கிரதை காரணமாக அந்த தாய் இவ்வாறு நடத்தப்பட்டதாகவும் இதற்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, துணை பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர்களும் பதவி விலகி உள்ளனர்.