தேனி: தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதுரு. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் இதுவரை பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 16779 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதை யநிலையில், 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றுக்கு 205 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, அங்குள்ள ‘சி’ பிளாக்கில் கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளையும் கொரோனா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.