முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகனும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் “சினிமாவில் ஒரே பாடலில் கதாநாயகன், பெரிய பணக்காரனாகி விடுவான். ஆனால் நிஜத்தில் அது சாத்தியம் இல்லை” என தெரிவித்தார்.
“காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளது போல், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனும் மதச்சார்பற்ற கொள்கை உடையவராக உள்ளார்” என குறிப்பிட்ட கார்த்தி “எனவே, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் கமலஹாசனும் இணைய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
“தனி ஆளாக கமலஹாசனால் அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது” என தெரிவித்த கார்த்தி, “மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் அரசியல் நீரோட்டத்தில் நீடித்து நிற்க வேண்டுமானால் ஏதாவது ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார்.
– பா. பாரதி